1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (18:29 IST)

திடீரென சாய்பாபா கோவிலுக்கு சென்ற நடிகர் விஜய்.. பாஜகவுக்கு மறைமுக ஆதரவா?

நடிகர் விஜய் திடீரென சாய்பாபா கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவர் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு கொடுப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கிறிஸ்துவராக இருந்தாலும் அவர் இந்து கோவிலுக்கும் சென்று வருவார் என்பதும் அந்த வகையில் சமீபத்தில் அவர் துபாய் சென்றபோது அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றதாகவும் தெரிகிறது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சமூக வலைதள பயனாளிகள் அவர் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் வகையில் தான் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் என்று கூறி வருகின்றனர்.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறினாலும் தனது ரசிகர்களை பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மறைமுகமாக சொல்லும் செய்தி தான் இந்த புகைப்படம் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இதனை மறுத்த தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் சாதாரணமாக பகிர்ந்த ஒரு புகைப்படத்தை வைத்து கதை கட்ட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

Edited by Mahendran