வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (12:22 IST)

அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்த தமிழ் காமெடி நடிகை.. வைரல் புகைப்படம்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி என்பதும் இவர் தனுஷின் படிக்காதவன் உட்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

நடிகை ஆர்த்தி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மேலும் அவரது கணவர் கணேஷ் என்பவரும் பாஜகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அண்ணாமலையுடன் ஆர்த்தி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகிய இருவரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva