சினிமாவில் மட்டும் இல்லை.. நிஜத்திலும் 10 பேரை அடிப்பாரு விஜய்! சீக்ரெட்டை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகவும், ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாகவும் விளங்குபவர் தளபதி விஜய். இவரது திரைப்படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய திருவிழா தான். திரையுலக வியாபாரத்தைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையே மிஞ்சும் அளவிற்கு அசுர வளர்ச்சியைக் கண்ட விஜய், தற்போது சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு 'தமிழக வெற்றிக் கழகம்' மூலம் தீவிர அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
இன்று தளபதி விஜய் இந்த அளவுக்கு ஒரு மாபெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்கிறார் என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் அவரது தந்தையும், மூத்த இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான். தனது மகன் திரையுலகில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, கேப்டன் விஜயகாந்தின் கால்ஷீட்டைப் பயன்படுத்தி விஜய்யை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொரு படத்திலும் தன் மகனின் வளர்ச்சிக்காக மிகவும் கவனமாகத் திட்டமிட்டு உழைத்தவர் அவர்.
சமீபகாலமாக அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக தந்தை - மகன் இடையே சிறிய இடைவெளி இருப்பதாகக் கூறப்பட்டாலும், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து எஸ்.ஏ.சி பகிர்ந்துள்ள சிலிர்க்க வைக்கும் தகவல் ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய்யின் ஆக்டிங் மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் குறித்துப் பேசிய அவர், "விஜய்யின் கண்களுக்கு இயல்பாகவே ஒரு மிகப்பெரிய பவர் இருக்கிறது. ஒரு காட்சிக்காக அவர் குனிந்துவிட்டு அப்படியே நிமிர்ந்து பார்த்தார் என்றால், அவரது கண்கள் சிவந்து காணப்படும். அந்தப் பார்வையிலேயே அவ்வளவு பெரிய வீரியம் இருக்கும்," என்று பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.
திரையில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டும் விஜய், நிஜத்திலும் எவ்வளவு வலிமையானவர் என்பதை விளக்கிய எஸ்.ஏ.சி, உண்மையாகவே விஜய் 10 பேரைத் தனியாக நின்று அடிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர். சினிமாவில் அவர் பெரிய ஸ்டார் ஆன பின்பு, நாங்கள் பொது இடங்களுக்குச் சென்றால் எங்களைச் சுற்றி பெரிய அளவில் கூட்டம் முண்டியடிக்கும். அந்த மாதிரி நேரங்களில், எனக்கு முன்னால் அரணாக நின்று விஜய் கூட்டத்தை விலக்குவார் பாருங்கள்... அவரது தள்ளும் வேகத்தில் வலதுபுறம் 10 பேரும், இடதுபுறம் 10 பேரும் சிதறி விழுவார்கள். அந்த அளவுக்கு அவர் உடல் பலம் கொண்ட ஸ்ட்ராங்கான நபர் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.