2 இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரான்.. ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பரபரப்பு..!
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் பயணம் செய்த இந்திய கொடி ஏந்திய இரண்டு வணிக கப்பல்கள் மீது ஈரான் நாட்டு ஆயுதப்படகுகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், கப்பல்களுக்கு பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே இந்திய கப்பல்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்ததாக தெரிகிறது.
உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இந்திய கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் கடற்படை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. கடல் சார் பாதுகாப்பு மற்றும் இந்திய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Edited by Siva