1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor prakash raj talk about Governor issue

ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்கது...நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் விஜயை ஆட்சியமைக்க இதுவரை ஆளுநர் அழைக்கவில்லை. நேற்று மதியம் விஜய் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள் தமிழக பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
 
அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை சேர்த்து தங்களுக்கு 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறியிருந்தார். ஆனாலும் தற்போது வரை விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் அழைக்கவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பெப்ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்பல்ரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 
 
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில்:
 
ஆளுநரின் நடத்தை முற்றிலும் அருவருக்கத்தக்கது மற்றும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. ஒரு மாநிலத்தின் உயரிய பதவியில் இருப்பவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். ஆனால் தற்போது நடப்பவை அதற்கு முரணாக உள்ளன.
 
நமக்குள் கொள்கை ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், விஜய் மக்களிடம் சென்று வாக்கு கேட்டு, மக்கள் ஆணையைப் பெற்றுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அல்லது ஒரு தலைவருக்குச் சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்டவும், தனது கருத்துக்களை முன்வைக்கவும் முழு அதிகாரம் உண்டு. அதனைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது ஜனநாயக விரோதமானது.
 
விஜய்க்கு சட்டமன்றத்தில் உரிய அனுமதி அளிக்கப்பட வேண்டும். மக்களின் விருப்பத்தை ஆளுநர் தனது அதிகாரத்தால் நசுக்கக் கூடாது என்று பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
ஆளுனர் - விஜய் சந்திப்பு முடிந்தது.. இன்று மாலை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?