1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (11:18 IST)

இந்தியாவுக்கே அவர் சூப்பர் ஸ்டார்: ரஜினியை சந்தித்த பின் அபுபக்கர் பேட்டி

இந்தியாவுக்கே அவர் சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த கருத்துக்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களை ஏற்படும் பாதிப்பு குறித்து ரஜினி புரியாமல் பேசுவதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ரஜினிகாந்த் முடிவு செய்தார். இதனை அடுத்து இன்று காலை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஜினியின் இல்லத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
 
ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சிஏஏ சட்டத்தை ஆதரிப்பதாக கூறிய ரஜினியின் பேச்சை நாங்கள் எதிராக பார்க்கவில்லை. அவரது கருத்து அது. அவர் சொன்னதை உள்நோக்கத்துடன் பார்க்கக் கூடாது. மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம், நன்றி சொல்கிறோம். அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இருப்பினும் இந்த சந்திப்பில் பேசியது என்ன? என்பது குறித்து அபுபக்கர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது