1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (10:38 IST)

ரஜினியை சந்தித்த இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபெக்கர்

ரஜினியை சந்தித்த இந்திய ஹஜ் சங்க தலைவர் அபுபெக்கர்
நாடு முழுவதும் சிஏஏ சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் செய்து வரும் நிலையில், ரஜினிகாந்த் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்தால் இஸ்லாமிய அமைப்பினர் பலர் அதிருப்தி அடைந்து அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு சிஏஏ சட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ரஜினிகாந்த் புரியாமல் பேசுவதாக விமர்சனம் செய்தனர்
 
இந்த நிலையில் இஸ்லாமிய மத குருமார்களை ரஜினிகாந்த் நேரடியாக சந்தித்து பேச முடிவு செய்ததாக நேற்று மாலை செய்திகள் வெளிவந்தது. அந்த வகையில் சற்று முன்னர் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் ரஜினிகாந்துடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் ரஜினியிடம் விளக்கியதாக இருக்கிறது 
 
அதேபோல் ரஜினியும் தனது கருத்து குறித்து அவரிடம் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது இந்த சந்திப்பால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்