செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:07 IST)

இஸ்லாமியர்கள் திமுகவை நம்ப வேண்டாம்; இல.கணேசன்

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சென்னை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக் கூறி கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தினர்.

இதில் கலந்துக்கொண்ட பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேஷன், திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம். திமுக போராட்டத்தை தூண்டிவிட்டு பின்னால் சென்று விடுவார்கள், துப்பாக்கிச்சூட்டில் பலியாவது இஸ்லாமியர்கள் தான்” என கூறியுள்ளார்.