புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (19:26 IST)

பிரதமர் மோடி , அமித் ஷா உருவப்படங்களை கிழித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

பிரதமர் மோடி , அமித் ஷா உருவப்படங்களை கிழித்து மாணவர்கள் ஆர்பாட்டம் !

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான மோகன் பாகவத்,  கோல்வாக்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்  அமித் ஷா ஆகியோரின் உருவப்படங்களை சென்னை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
கடந்த வருடம் இறுதியில் சிஏஏ என்ற இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக அப்போது முதலே எதிர்க்கட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் போராடி வருகின்றனர்.  சமீபத்தில்   வடகிழக்கு டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக வெடித்தது.
 
தற்போதுவரை 42 பேர் இந்த வன்முறையால் இறந்துள்ளனர்.வன்முறையைத் தூண்டும்படி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,நேற்று டெல்லி போலீஸார் தற்போது வன்முறையைத் தூண்டியவர்கள் மீது நவடிக்கை எடுக்க முடியாது என பதில் அளித்திருந்தனர்.
 
இந்த நிலையில், இந்தக் கலவரத்தைக் கண்டித்து  சென்னை பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் செர்ந்த மாணவர்கள் பலகலைக் கழக வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.அப்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான மோகன் பாகவத், கோல்வாக்கர் , பிரதமர் மோடி,மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.