தொடர்புடைய செய்திகள்
- வெற்றியோடு திரும்பி வா: கமல்ஹாசனை வாழ்த்திய உறவினர்!
- தேர்தல் சீட் கிடைக்காததால் அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ
- மகளின் ஆல்பம் வெற்றி…மக்களுக்கு நன்றி கூறிய தனுஷ் பட இசையமைப்பாளர்…
- முதலில் வில்லன்… பிறகு கதாநாயகன்…. ரஜினி போன்றது எங்கள் தேர்தல் அறிக்கை – அதிமுக அமைச்சர் பேச்சு!
- எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று காட்டுங்கள் பார்க்கலாம்: ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!
திமுகவுக்கு 169 தொகுதிகள், அதிமுகவுக்கு எவ்வளவு? கருத்துக்கணிப்பில் தகவல்!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு சில கருத்து கணிப்புகள் ஏற்கனவே திமுக தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வந்தது
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறி உள்ளது. ஏபிபி மற்றும் சி-வோட்டர் எடுத்த கருத்துக் கணிப்பின் படி தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளது
திமுக கூட்டணி 169 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு படுதோல்வி இருக்காது என்றும் அந்த கூட்டணி 53 முதல் 63 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த கருத்துக் கணிப்பின்படி திமுகதான் அடுத்து ஆட்சியமைக்கும் என்றும் மு க ஸ்டாலின் தான் முதல்வர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
