செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (20:34 IST)

மகளின் ஆல்பம் வெற்றி…மக்களுக்கு நன்றி கூறிய தனுஷ் பட இசையமைப்பாளர்…

சமீபத்தில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி
.
இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்றா தளத்தில் உருவாகியுள்ளது.

இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்துள்ளார்.

இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று  1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் படைப்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். அவை மகிமைப்படுத்தப்படவேண்டும். நாங்கள் செய்யும் அனைத்தும் என் அன்பான் மக்களுக்காக….நாம் முன்னேறும்போது இந்தப் புரட்சியில் இணைய பல கலைஞர்கள் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.