முதலில் வில்லன்… பிறகு கதாநாயகன்…. ரஜினி போன்றது எங்கள் தேர்தல் அறிக்கை – அதிமுக அமைச்சர் பேச்சு!
அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியான சில நாட்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவின் அறிக்கை கதாநாயகன் என்றும் அதிமுக அறிக்கை வில்லன் என்றும் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ரஜினி எப்படி முதலில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனாரோ, அதுபோல எங்கள் தேர்தல் அறிக்கை முதலில் வில்லனாக தோன்றும். பின்பு கதாநாயகனாக மாறும் எனக் கூறியுள்ளார்.