வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (13:16 IST)

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்

chennai central
சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறு விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையம் தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. நாள்தோறும், பல ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பயணிகள் இங்கிருந்து வெளியூர் செல்வதும், வெளியூரில் இருந்து இங்கு வருவதுமாக ரயில்போக்குவரத்தில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது இளம் பெண் ஒருவர் தவறி விழுந்தார். ரயிலில் சிறிது தூரம் இழுத்துச் சென்ற நிலையில் ரயில் நின்றதால்  அருகில் நின்றிருந்த நபர் விரைந்து சென்று அப்பெண்ணை மீட்டார்.

மீட்கப்பட்ட காருண்யா என்ற இளம்பெண்ணை  அருகில் இருந்தவர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.