வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (20:15 IST)

ஆசைக்கு இணங்காத அத்தையை நண்பருடன் சேர்ந்து கொன்ற மருமகன்

சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த  இளைஞர் ஒருவர் ஆசைக்கு இணங்காத அத்தையை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் உள்ளா கிருஷ்ணமூர்த்தி நகரில் வசித்து வருபவர் அன்பு. இவரது மனைவி வேளாங்கண்ணி954). இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் லான்சி என்ற  மகள்(22) உள்ளனர்.

இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை  செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று கணவர் மற்றும் ஒரு பிள்ளைகளும் வேலைக்குச் சென்ற நிலையில், வேளாங்கண்ணி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இரவில் மகன் மரியம் லாரன்ஸ் பணிமுடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது தன் தாய் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது,  இளைஞர்கள் இருவர் வேளாங்கண்ணி வீட்டிலிருந்து வெளியேறியது தெரிந்தது.

போலீஸார் விசாரிக்கையில் அவர்கள் வேளாங்கண்ணியின் தம்பி மகனான அகஸ்டின்(21) மற்றும் அவரது  நண்பர் சாலமன்(22) என்ற தகவல் தெரிந்தது. அவர்களிடம் விசாரிக்கையில், தங்கள் ஆசைக்கு இணங்காததால் அத்தையை அடித்துக் கொன்றதாக கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.