1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:35 IST)

தக்காளி விலை இன்று மேலும் குறைவு.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு?

Tomato
தக்காளி விலை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் என விற்பனையானது என்பதும் தெரிந்ததே.
 
 இந்த நிலையில் தக்காளி விலை நேற்று விலை குறைந்து ஒரு கிலோ 160 ரூபாய் என விற்பனையான நிலையில் இன்று மேலும் பத்து ரூபாய் குறைந்து 150 என விற்பனையாகி வருகிறது. 
 
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி வரத்து அதிகரித்ததை அடுத்து பத்து ரூபாய் குறைந்துள்ளது 
 
இனிவரும் நாட்களிலும் படிப்படியாக தக்காளி குறையும் என்றும்  ஒரு சில நாட்களில் 100 ரூபாய்க்கு குறைவாக தக்காளி விற்பனையாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva