என்.எல்.சி விவகாரம்.. இழப்பீடு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
என்எல்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விளை நிலத்தில் திடீரென என்எல்சி நிர்வாகம் பணியை மேற்கொண்ட நிலையில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் என்எல்சி ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் நாற்பதாயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப்பின் நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Edited by Siva