திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (17:20 IST)

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து...மாடியில் இருந்து குழந்தைகளை வீசிய பெற்றோர்..

Kazakhstan
கஜகஸ்தான் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

கஜகஸ்தான் நாட்டில் மிகப்பெரிய நகரான அல்மாட்டியில்  உள்ள  16 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தளத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  யாரும் எதிர்பாராத இந்த  விபத்தில் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர்கள் குழந்தைகளை மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.

இவ்விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர்.  அப்போது, 6 வது தளத்தில் இருந்த தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி, அவர்களை மாடியில் இருந்து கீழே வீசினர்.  அவர்களும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். கீழே மெத்தைகள், மற்றும் போர்வைகள் வைத்தது அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றினர்.

இந்த விபத்தில் இருந்து சுமார் 300 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், காயமடைந்த 16 குழந்தைகள் உள்படட 31  பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.