இன்று அதிகாலை சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?
பிரபல அரசியல் விமர்சகரும் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பயனாளியுமான சவுக்கு சங்கர் இன்று அதிகாலை சாலை விபத்தில் மரணம் அடைந்ததாக ஒருசில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு இருப்பதாக சவுக்கு சங்கர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அதிமுக திமுக பாஜக உள்பட அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்பவர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் இன்று அதிகாலை சென்னை அசோக் நகர் அருகே லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை குறித்து கேலி கிண்டலுடன் கூடிய டுவிட்டுக்களை பதிவுசெய்துள்ளார். மேலும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்