வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (16:54 IST)

கட்டுப்பாடில்லாமல் பறந்த கார்; மேம்பாலத்தில் குட்டிக்கரணம்! – வைரலாகும் வீடியோ!

கன்னியாக்குமரியில் மேம்பாலத்தில் மிக வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுபாடிழந்து கவிழ்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனது குழந்தை மற்றும் சகோதரியுடன் ஆதங்கோடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

கார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற காரை முந்த அனில்குமார் முயன்றபோது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த காட்சியை பின்னால் வந்து கொண்டிருந்த காரில் இருந்தவர் படம்பிடித்த நிலையில் சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. மேலும் காரில் சென்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.