திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (07:57 IST)

உடலுறுப்புத் தானம் செய்த நடிகர் சஞ்சாரி விஜய்!

கன்னட சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் சஞ்சாரி விஜய் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.

ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகுக்கு அறிமுகமானவர் சஞ்சாரி விஜய். இவரின் நடிப்பை பார்த்து மிரண்டு போன நடிகர் மம்மூட்டி தேடிச் சென்று பாராட்டினார். இந்நிலையில் அவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து திரைக்கலைஞர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.