வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (13:00 IST)

காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் -தினகரன் வலியுறுத்தல்

dinakaran
கோவை சகர காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு, அவர் மன அழுத்தத்தில் இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இவரது மறைவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி  காவல்துறை உயரதிகாரிகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த திரு.விஜயக்குமார் ஐ.பி.எஸ் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தவர் திரு. விஜயகுமார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக காவல்துறை அதிகாரிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.

அதே நேரத்தில் காவல்துறையில் நிலவும் பணி சுமையை குறைக்கவும், காவல்துறையினருக்கு உரிய ஓய்வு அளிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் வலியுறுத்துகின்றேன’’  என்று தெரிவித்துள்ளார்.