1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADGP says about DIG vijaykumar suicide,

டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு இதுதான் காரணம்: விசாரணைக்கு பின் ஏடிஜிபி அருண் பேட்டி

கோவை
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்த ஏடிஜிபி அருண் பேட்டி அளித்துள்ளார். 
 
தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் சில வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் விஜயகுமார் ஓசிடி மற்றும் மன அழுத்தத்தில் இருந்தார் என்று அவருடைய மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மருத்துவ காரணங்களால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விஜயகுமார் தற்கொலையை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஏற்கனவே திருமணமானவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தாரா அண்ணாமலை? பரபரப்பு தகவல்..!