அரபிக்கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும், இதனால் கேரளா, தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தென் தமிழக பகுதிகளில் 3 நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி
அளித்துள்ளார். வங்க மற்றும் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva