இன்று இரவு 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று இரவு 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அதாவது கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இனி தொடர்ச்சியாக மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran