1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in 11 districts of tamil nadu today

இன்னும் சில மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

சென்னை
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
தென் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழைக் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதியில் ஒருசில  இடங்களில்
லேசான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அழுத்தமாகச் சொல்லுங்கள்- ஈபிஎஸ்