வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:39 IST)

காலேஜ் பையன் போல் நடித்து கல்லூரி மாணவியை சீரழித்த லாரி டிரைவர்!!! அம்பலமான பித்தலாட்டங்கள்!!

லாரி டிரைவர் ஒருவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவன் செல்லதுரை. லாரி டிரைவரான இவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் செல்லதுரை முகநூலில் தான் ஒரு கல்லூரி மாணவன் என கூறி டிசைன் டிசைனாக போட்டோ பதிவிட்டுள்ளான். இதனை பார்த்த ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இவனுடன் பேசியுள்ளார். தனது பேச்சின் மூலம் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்துள்ளான் செல்லதுரை.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்லதுரை மாணவியை மூளைச்சலவை செய்து அவரது வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளான். தனியாக வீடு எடுத்து இருவரும் வசித்துள்ளனர். அப்போது தான் மாணவிக்கு செல்லதுரை ஒரு லாரி டிரைவர் என தெரியவந்தது. அத்தோடு இல்லாமல் அவனுக்கு திருமணமாகியதும் பல பெண்களுடன் பழகுவதையும் அறிந்த மாணவி செல்லதுரையை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
 
ஆனாலும் விடாத செல்லதுரை, நேற்று மாணவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளான். இதனையறிந்த அக்கம்பக்கதினர், செல்லதுரையை மரத்தில் கட்டி வைத்து பொளந்துகட்டினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவனை கைது செய்து அழைத்து சென்றனர்.
 
இளம்பெண்கள் முகம் தெரியாத ஆட்களிடையே பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என பெற்றோரும், காவல் துறையினரும் எவ்வளவு தான் கூறினாலும் பல பெண்கள் இது மாதிரியான ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கி தங்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.