புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2019 (11:42 IST)

உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி!!

கர்நாடகாவில் பொறியியல் கல்லூரி மானவி ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 23 வயது இளம்பெண் சிவில் என்ஞினியரிங் படிப்பு படித்து வந்தார். கடந்த 13ந் தேதி வீட்டில் இருந்து காலேஜுக்கு சென்ற அவர்  வீடு திரும்பவில்லை.
 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, 2 நாட்கள் கழித்து கல்லூரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கியபடி மாணவி பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் இது குறித்து எந்த மீடியாவும் பேசவில்லை. 
 
இதையடுத்து இந்த விவகாரமானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி, இறந்த பெண்ணுக்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதையடுத்து இந்த வழக்கில் அதே கல்லூரியை சேர்ந்த சுதர்சன் என்பவனை போலீஸார் விசாரித்து வருகின்றனர். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.