புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (16:12 IST)

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்: தட்டிக்கேட்ட மாணவியை உயிரோடு எரித்த கொடூரம்

தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த மாணவி ஒருவர் பள்ளியில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வங்கதேசத்தை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி(19) என்ற இளம்பெண் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஜகான் ரபியிடம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன மாணவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் அந்த தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியருக்கு வேண்டிய நபர்கள், மாணவியிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் மாணவி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கடுப்பான அந்த கும்பல் மாணவியை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து இந்த கொடூர செயலை செய்த நபர்களை தேடி வருகின்றனர்.