சலூனிலிருந்து வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கேடுகெட்ட புருஷன் செய்த வேலை!!!

abuse
Last Updated: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (10:36 IST)
துபாயிலிருந்து சென்னைக்கு வந்து பெற்ற மகளை குடிக்க வைத்து குழந்தை என்றும் பாராமல் அவளை சீரழித்த கேடுகெட்ட தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 4 வயது மகளுடன் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். குழந்தையின் தந்தை துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு திரும்பினார். அந்த பெண்மணி குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அருகிலிருக்கும் சலூனில் வேலைக்காக சென்றார். 
 
அப்போது குழந்தையின் தந்தை, அவளுக்கு மது கொடுத்துள்ளான். ஒன்றும் தெரியாத குழந்தை மயங்கி விழ, அந்த கேடுகெட்ட தகப்பன் குழந்தையை சீரழித்துள்ளான். வேலை முடிந்து வீடு திரும்பிய தாய், குழந்தை மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் குழந்தை குடிக்கவைத்து சீரழிக்கப்பட்டு தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் அந்த கேடுகெட்ட தகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :