1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A case filed against naam tamilar seeman

அருந்ததியினர் குறித்து சர்ச்சை கருத்து: சீமான் மீது வழக்குப்பதிவு!

seeman
அருந்ததியர் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். சீமானின் பேச்சுக்கு அருந்ததியர் உள்பட பல்வேறு தரப்பினார் கடும் கண்டனங்கள் செய்து வந்தனர். மேலும் சீமான் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தர மாட்டோம் என்று பலர் பகிரங்கமாக தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் சீமான் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அருந்ததியினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2: உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு!