1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (14:59 IST)

பேருந்தில் 1 ரூபாய் சில்லறை தராத வழக்கு.. ரூ.3000 நஷ்ட ஈடு அறிவித்து உத்தரவிட்ட நீதிமன்றம்..!

1 rupee coin
பேருந்தில் ஒரு ரூபாய் சில்லறை தரவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் மீது தான் பயணம் செய்த பேருந்தின் கண்டக்டர் ஒரு ரூபாய் சில்லறை தரவில்லை என வழக்கு தொடர்ந்தார். 
 
கடந்த 2019 ஆம் ஆண்டில் தான் பேருந்தில் பயணித்த போது சில்லறை  தராமல் தராத கண்டக்டர் தன்னை கடிந்து கொண்டதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 15 ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்து இருந்தார். 
 
இந்த வழக்கு மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3000 அளிக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூபாய் 1 சில்லறை தரவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரூ.3000 நஷ்ட ஈடு என தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran