திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (18:01 IST)

அண்ணா சாலை நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை: மெட்ரோ நிர்வாகம் விளக்கம்..!

chennai
சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்த நில நடுக்கத்திற்கு மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்தபோது சென்னை அண்ணா சாலையில் உணரப்பட்ட நில அதிர்வு மெட்ரோ பணிகளால் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 
 
சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட் சாலையில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நில அதிர்வு குறித்து தேசிய புவியியல் மையத்தில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. 
 
இந்த நிலையில் நில அதிர்வு போன்ற தாக்கத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணம் இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அப்படி என்றால் இந்த அதிர்வுக்கு என்ன காரணம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
Edited by Mahendran