1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A case filed against Edappadi palanisamy

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

ஜெயக்குமார்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திமுக தொண்டரை தாக்கிய வழக்கு, அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கு, மற்றும் மோசடி வழக்கு என மூன்று வழக்குகளில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் ஜெயக்குமார் கைதை கண்டித்து நேற்று சேலம் பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு…ராகுல்காந்தி இரங்கல்