ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (13:35 IST)

ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை!

தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவு. 

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பிரிவுகளில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை செய்துள்ளனர். ஜெயகுமார் மட்டுமின்றி ஜெயக்குமாரின் மகள் மருமகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
இந்த ஆர்பாட்டத்தின் போது முன்னாள் எம்.எல்.ஏ செம்மலை மயங்கி விழுந்தார். போராட்டத்தின்போது `போடாதே போடாதே, பொய்வழக்கு போடாதே. வளைக்காதே வளைக்காதே சட்டத்தை வளைக்காதே’ என அங்கு வந்திருந்த அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.