திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (17:37 IST)

உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு…ராகுல்காந்தி இரங்கல்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 6 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை இருதரப்பினிலும் ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் வசித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன், இன்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை உறுதிசெய்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில்,  நவீனின் குடும்பத்தினருக்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,   இந்திய மாணவர் நவீன்  உயிரிழ்ந்த துயரச் செய்து கிடைத்தது. அவரது குடும்பத்திறு ஆழ்ந்த இரங்கல். உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்க மத்திய அரசு  தெளிவாக திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.