தொடர்புடைய செய்திகள்
- ரூபாய் நோட்டில் ‘சத்ரபதி சிவாஜி' : பாஜக எம்.எல்.ஏ வெளியிட்ட புகைப்படம்
- கோவை கார் வெடிப்பு; ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தொடர்பா? – பரபரப்பு தகவல்!
- திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- பெண் காவலரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!
- கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!
பாஜக பந்த்-க்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
கோவையில் வரும் 31ஆம் தேதி பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்த பந்த்தை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் இது ஒரு தீவிரவாத செயலின் பின்னணியா என்பது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கோவையில் மக்கள் பதட்டமாக இருக்கின்றனர் என்றும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்டோபர் 31ஆம் தேதி பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஆர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
