திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (22:58 IST)

திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

bjp
கோட்டையில் இருக்கும் ஸ்டாலின் தடுக்க முடியாத குண்டு வெடிப்பு சம்பவத்தினை கோட்டை ஈஸ்வரன் தடுத்துள்ளார் என்றும், எதை பேசுவது எதை பேசக்கூடாது என்று தெரியாமல் இருக்கும் ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தான் – கரூரில் நடைபெற்ற  பாஜக ஆர்பாட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு.
 
தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறமையற்ற திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவரும், கேரளா பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை குண்டு வெடிப்பு சம்பவம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடத்தவே திட்டமிடப்பட்டு காரை கொண்டு வந்துள்ளனர். அவற்றை கோட்டை ஈஸ்வரன் தடுத்துள்ளார்.

கோட்டையில் இருக்கும் ஸ்டாலின் தடுக்கவில்லை என்றார். நம்மிடம் ஹிந்தி படிக்க வேண்டாம் என சொல்லி விட்டு தனது பேரன் கலாநிதி மாறன் ஹிந்தி பேசுவதை பெருமையாக பேசியவர் கருணாநிதி என்றார். இந்தி தெரிந்தாதால் அண்ணாமலையும் பிரதமர் ஆவார். எனக்கு இந்தி தெரியாததால் பிரதமர் ஆக முடியாது என்றார். காமராஜர், கருணாநிதி உள்ளிட்டோர் பிரதமராகுக் வாய்ப்பு கிடைத்தும், இந்தி தெரியாததால் பிரதமராகவில்லை என்றார்.

Edited by Sinoj