திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (21:02 IST)

பெண் காவலரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

bjp
கள்ளக்குறிச்சியில்  பெண் போலீஸிடம் பணம்கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்ஜி ஆர்  நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் பாஜக கட்சியில் இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இவரும் கோட்டைமேடு பகுதியயைச் சேர்ந்த காவலர் சவீதாவும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சில மாதங்களாக இருவரும் தனித்தனியே வசித்து வரும் நிலையில்,  இன்று ரஞ்சித்குமார், பெண் காவலர் சவீதாவிடம் ரூ.30 ஆயிரம்  பணம்  கேட்டு  மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சவீதா அளித்த புகாரின்படி, பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj