1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (09:01 IST)

கோவை கார் வெடிப்பு; ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தொடர்பா? – பரபரப்பு தகவல்!

coimbatore
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரில் ஒருவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் முபின் என்ற நபர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலியான முபினின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முகமது தல்கா என்பவர் 1998ல் நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட நவாப் கான் என்பவரின் மகன் என முன்னதாக விசாரணையில் தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது மற்றொரு குற்றவாளியான ஃபெரோஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஃபெரோஸ் என்பவர், இந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்னதாக கேரளாவில் சிறையில் உள்ள ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் இலங்கை தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் தொடர்பில் இருந்ததாக கைதானவர்தான் இந்த முகமது அசாருதீன். இவர்களை ஃபெரோஸ் சென்று சந்தித்ததின் நோக்கம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K