திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (11:21 IST)

கொதிக்கும் சாம்பார் அண்டாவிற்குள் விழுந்த 2 வயது குழந்தை: கடைசியில் நேர்ந்த சோகம்

தாயின் அஜாக்கிரதையால் கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
 
சென்னை கே.கே நகரை சேர்ந்த சூர்யா என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்ற சூர்யா குழந்தையை கவனிக்க தவறிவிட்டார்.
 
அந்த நேரத்தில் சூர்வாயின் 2 வயது குழந்தை, வீட்டருகே இருந்த டிபன் கடை அருகில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது குழந்தை எதிர்பாராதவிதமாக டிபன் கடையில் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்தது.
 
உடனடியாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.