புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (13:33 IST)

80 கிமீ வேகத்தில் கடுங்காற்று: பீதியை கிளப்பும் புயல்

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல் கொந்தளிப்பு, அதி வேகத்தில் காற்று வீசக்கூடும் என புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பீதியை கிளப்பியுள்ளது. 
 
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு...
 
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் 8.1 மீ உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும்.
மேலும் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்பதால் கடல் வழக்கத்திற்கு மாறாக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், 16 ஆம் தேதி அதிகாலை 2.30 முதல் 17 ஆம் தேதி இரவு 11.30 மணி வரை அலைகள் 2.5 மீ உயரம் வரையிலும் அதிகபட்சமாக 4.2 மீ முதல் 8.1 மீ உயரம் வரை எழும்பக்கூடும். 
 
அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் சுழல் காற்று, பின்னர் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கடுங்காற்று வீசவும் வாய்ப்புள்ளது. புயலால கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஆபத்தான விளைவுகள் ஏதும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.