சென்னை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்: சோனியா காந்தி வருகை எதிரொலி!!

mak
Last Updated: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:00 IST)
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  சிலை திறப்பு விழாவிற்கு வரும் சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
sonia
 
சோனியா காந்தியின் வருகையையொட்டி விமான நிலையம், அண்ணா அறிவாளயம். மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :