வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (14:48 IST)

மாடியில் இருந்து தவறி விழுந்த 2வயது குழந்தை...அதிர்ச்சி சம்பவம்

மதுரவாயல் கங்கையம்மன் 8வது தெரு பகுதியில் தியா என்ற 2 வயது குழந்தை வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கங்கையம்மன் என்ற பகுதியில் உள்ள 8வது தெரு பகுதியில் தியா என்ற  2 வயது குழந்தை வீட்டின் முதல் மாடியில் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது, குடும்பத்தினர் அசந்த நேரம் பார்த்து, குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதில்,குழந்தை கடுமையான காயமடைந்த நிலையில், குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள்  நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj