மாடியிலிருந்து குதித்த மற்றொரு மாணவி..அதிர்ச்சி சம்பவம்
மாமல்லபுரம் அருகே 9 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கஜசுபமித்ரா. இவர் 2 ஆம் பருவத் தேர்வின்போது,கையில் பிட் பேப்பர் வைத்திருந்ததாகவும், இதனைப்பார்த்த ஆசிரியை இதுகுறித்துப் பெற்றோரிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால், பயந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது, காயம் அடைந்துள்ள மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் தற்போது மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.