செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:41 IST)

9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய உறவுக்கார இளைஞர்: போக்சோ சட்டத்தில் கைது..!

9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை அவருடைய உறவுக்காரரே கர்ப்பமாக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ம் வகுப்பு படிக்கும் மாணவி அடிக்கடி தனது அத்தை வீட்டுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அத்தை மகனான பால சக்தி என்ற 22 வயது இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதன் காரணமாக 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்தான் அவருடைய தாய் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்ததாகவும் இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து பால சக்தியை திருக்கோவிலூர் போலீஸ் போக்சோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்தை வீட்டிற்கு அவ்வப்போது வரும் ஒன்பதாம் வகுப்பு சிறுமியை 22 வயது இளைஞர் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran