புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (10:32 IST)

கரும்பு தோட்டத்தில் 10 சிறுமி வன்கொடுமை செய்து கொலை! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

crime

மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பேசுபொருளாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது.

 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பத்லாபூரில் நர்சரி ஸ்கூல் படிக்கும் சிறுமிகளை பள்ளி துப்புரவு தொழிலாளி வன்கொடுமை செய்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றொரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆபாசப்படங்களை மாணவிகளுக்கு காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் நடந்தது. அதை தொடர்ந்து மற்றுமொரு பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நடந்துள்ளது.

 

கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகாவை சேர்ந்த ஷியே என்ற கிராமத்தில் பீகாரை சேர்ந்த தம்பதி தங்களது 10 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் சிறுமி அதிகமாக செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதாக அவளது பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி இரவாகியும் வீடு திரும்பவில்லை.
 

 

இதனால் பல இடங்களிலும் சிறுமியை தேடிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

 

இதுத்தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K