ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (11:01 IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேந்திரிய வித்யாலயா ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி ஒருவருக்கு கலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராமச்சந்திரா சோனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் வந்ததை அடுத்து உடனடியாக தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து காவல்துறையினர் ஆசிரியர் ராமச்சந்திரா சோனி என்பவரை விசாரித்த நிலையில் ஏற்கனவே அவர் பல மாணவிகளுக்கு இதே போன்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பள்ளியிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran