திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:38 IST)

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி..! சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!!

dengu death
வாணியம்பாடியில் டெங்கு காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவரது மகன் கோபிநாத் கிரிசமுத்திரம்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கோபிநாத்திற்கு கடந்த 2 ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
இதை அடுத்து மாணவன் கோபிநாத்தை அவரது பெற்றோர் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவனை அவரது பெற்றோர் பெங்களூரில்  உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. 
ALSO READ: 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை.!! 
 
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், விடியற்காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பின்னர் கோபிநாத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.. பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது