1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:45 IST)

டெங்கு காய்ச்சலுக்கு சென்னை சிறுவன் பலி.. அதிர்ச்சி தகவல்..!

டெங்கு காய்ச்சலுக்கு சென்னை சிறுவன் பலி.. அதிர்ச்சி தகவல்..!
சென்னை பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்து சிறுவன் சக்தி சரவணன் சற்றுமுன் மரணம் அடைந்தார். கடந்த 8ஆம் தேதி முதல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.
 
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சக்தி சரவணனுக்கு ரத்த அணுக்கள் குறைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Mahendran