1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10th std boy died for dengu fever

டெங்கு காய்ச்சல்.. சென்னை சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம்..!

டெங்கு காய்ச்சல்
சென்னையை சேர்ந்த சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்ததாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அடுத்த பூந்தமந்தலில் 15 வயது சிறுவன் ஒருவன் டெங்கு காய்ச்சல் காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். ராஜ் பாலாஜி என்ற அந்த சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜ் பாலாஜி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 
 
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் குறைந்து வருவதாக தமிழக அரசு கூறிவரும் நிலையில்  டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிர் இழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran